செய்திகள் :

மைனர் சகோதரிகள் மர்ம மரணம்; ரகசியமாகப் புதைத்த பெற்றோர்; கத்திரிக்காய் புரோட்டா சாப்பிட்டதால் பலியா?

post image

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒன்பது மாதக் கைக்குழந்தை உட்பட மூன்று மைனர் சகோதரிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துள்ளனர்.

இசாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிபோரா குர்த் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த பால்குந்த் குஷ்வாஹாவின் மகள்களான பூனம்(7), மனிஷா(3) மற்றும் ஒன்பது மாதக் குழந்தை சாஹத் ஆகியோர் நேற்று இரவு கத்திரிக்காய் புரோட்டா மற்றும் ரொட்டி சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்களை மருத்துமனைக்குக் கொண்டு செல்லவில்லை. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்காமல் 3 சகோதரிகளின் உடல்களையும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து புதைத்துவிட்டனர்.

இது குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதைக்கப்பட்ட சிறுமிகளின் உடல்களைப் பலத்த பாதுகாப்புடன் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி பி.குப்தா கூறுகையில், "இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன், நான் எனது முழு குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றேன். காவல்துறை, வருவாய் மற்றும் தடயவியல் குழுக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வருகிறோம். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகுதான் மரணத்திற்கான காரணம குறித்து தெரிய வரும்'' என்று தெரிவித்தார்.

போலீஸார் சிறுமிகளின் குடும்பத்தினரிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் - சாடும் பாஜக

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதி... மேலும் பார்க்க

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" - பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண... மேலும் பார்க்க