செய்திகள் :

மோசடி புகார்: ``அம்பிகா அக்காவை நம்பாம யாரை நம்புறது நம்பினேன். ஆனா.!" - நடிகை ராதா வேதனை

post image

பிரபல திரைப்பட நடிகை ராதா வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தன் சகோதரர் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``2006-ல் எனக்கும் அக்கா அம்பிகாவுக்கும் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டது. அதில் அக்காவுக்கு பெரிய பில்டிங் ஒன்றும் எனக்கு ஏ.ஆர்.எஸ் கார்டன்... அதாவது நான் ஆர்.ஆர்.எஸ் கார்டன் எனப் பெயர் மாற்றிய சொத்தும் கொடுக்கப்பட்டது. அக்காவை நம்பாமல் யாரை நம்புவது. எனவே, அதை நிர்வகிக்கும் பொறுப்பை அக்கா அம்பிகாவிடன் விட்டிருந்தேன்.

ஆனால், எனது வங்கிக் கணக்கிற்குரிய சுமார் 5 காசோலைகளை (Cheques) முறைகேடாகப் பயன்படுத்தி, என் சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன்ஆகிய இருவரும் இணைந்து மோசடி செய்ய முயன்றார்கள்.

அம்பிகா - ராதா
அம்பிகா - ராதா

என் பெயரில் அக்கா அம்பிகா பெரிய தொகை ஒன்றை பேங்க் செக் கொடுக்க, அது எனக்கு மெஸேஜாக வந்தது. அந்தத் தொகையை பார்த்ததும் நான் பயந்துவிட்டேன். நான் அவ்வளவு தொகை சம்பாதிப்பவளில்லை. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக என்னை வீட்டில் அனுமதிக்கவில்லை. போனில் அழைத்தாலும் எடுப்பதில்லை. எனக்கு என் தம்பி மல்லிகார்ஜுனன் மீதுதான் சந்தேகம் இருக்கிறது.

நீங்கள் எல்லோரும் என் குடும்பத்தில் ஒருவர் எனக் கருதுவதால்தான் இதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். எல்லா விவரங்களையும் புகாரில் தெரிவித்துவிட்டேன். இனி அவர்கள் பார்த்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.

ஏற்கனவே நில மோசடி உள்ளிட்ட புகார்களை நடிகை ராதா அளித்திருந்த நிலையில், தற்போது புதிதாக தனது குடும்பத்தினர் மீது இந்த பண மோசடி புகாரை அளித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"இன்று கொண்டாடுறாங்க; ஆனா ஒரு வருடத்திற்கு முன்பு..." - ரிஷிகாந்த் குறித்து 'மொத ராத்திரி' இயக்குநர்

'மொத ராத்திரி' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'டோரதி' படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரஜின... மேலும் பார்க்க

"நான் கையொப்பமிட்ட காசோலைகளைத் திருடினார்" - சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்

நடிகை ராதா, அவருடைய சகோதரி அம்பிகா மீது மோசடி குற்றம்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.அம்பிகாவும், தன்னுடைய சகோதரரும் தன் அனுமதி இல்லாமல், தன் அறைக்குள் நுழைந்து தான் கையொப்பமிட்ட காசோலையைத் திருடிவிட்ட... மேலும் பார்க்க

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்; திரையுலகத்தினர் இரங்கல்!

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயண சாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.மறைந்த சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி, என இரு மகள்கள் மற்றும் நடிகர்கள் ர... மேலும் பார்க்க

"என் பேரு புரோட்டா சூரி இல்ல..!"- நடிகர் சூரி விளக்கம்

'மண்டாடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். " 'மண்டாடி' திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 10 நாட்களை கடந்துவிட்டது என நினைக்கிறேன். ஹவுஸ... மேலும் பார்க்க

"குறும்படங்களுக்கான தளம் இது'' - இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு!

குறும்படங்கள் இன்று பல இயக்குநர்களுக்கு சினிமாவில் முகவரியை தேடி தருகிறது. தற்போது தீக்ஷா என்பவர் குறும்பட திரையிடல்களுக்காகவே, 'தி திரை ஆன்சம்பிள்' என்கிற பெயரில் பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கியிரு... மேலும் பார்க்க

"எனக்கு போன் பண்ணாரு; நான் 'அதை' எதிர்பார்க்கவே இல்ல" - முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி

தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்த... மேலும் பார்க்க