செய்திகள் :

'மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது' - வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

post image

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 19 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 3,239 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சிலிண்டர்
சிலிண்டர்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச்சில் 144 ரூபாயும், ஏப்ரலில் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், 928 ரூபாய் 50 காசாக உள்ள வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி அப்படியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் பதிவில், "விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடி. மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது.

காங்கிரஸ்

வெறும் 4 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,518 உயர்ந்துள்ளது. மோடி அரசுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்க மட்டுமே தெரியும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது.

`ஒரே அடியாக...' - ரூ.993 உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை!

அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும் மோதல்போக்கு காரணமாக, வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலையில் சராசரியாக ரூ. 993 உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்... மேலும் பார்க்க

"இந்தியர்கள் வேண்டாம்..!" - தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு 2024-ம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக சுமார் 1,000 இந்தியத் தொழிலா... மேலும் பார்க்க

‘மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை!’ – செந்தில் பாலாஜி சொல்லும் விளக்கம்

மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்... மேலும் பார்க்க

UAE வெளியேறியது இருக்கட்டும்; OPEC என்றால் என்ன? அதன் பணி என்ன? - தெரிந்துகொள்வோம் வாங்க!

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக். இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா எண்ணெய் த... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், மனைவி பர்வீன் உள்ளிட்ட சி... மேலும் பார்க்க

"இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை; முறைப்படுத்த புதிய சட்டம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது அவர்களை மறித்து சென்ற கல்லுரி பேருந்து மீது மதுபோதையில் இருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் மத... மேலும் பார்க்க