செய்திகள் :

மோடியே ஒப்புக்கொள்கிறார்.. இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கேள்வி

post image

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மிகப் பெருமையாக உரையாற்றியிருக்கிறார்.

அந்த உரையை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் அமைச்சர் ரகுபதி, பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விடியோவை இணைத்து, அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?

தமிழ்நாட்டில் திரு.மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர்.

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தில்லியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், செ... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்... மேலும் பார்க்க

காலியாக இயக்கப்பட்ட கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஆனால், இந்த சிறப்பு ரயில் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதல் ந... மேலும் பார்க்க