செய்திகள் :

ம.பி-யில் பொது சிவில் சட்டம்: திருமணமானவர் வேறு ஒருவருடன் 'Live in'-ல் இருந்தால் என்ன தண்டனை?

post image

நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்தியப் பிரதேசமும் சேர்ந்து இருக்கிறது.

போபாலில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருமணம், வாரிசுரிமை, 'லிவ்-இன்' உறவுகள் (திருமணம் சாராத கூடிவாழும் முறை) மற்றும் மத சுதந்திரம் ஆகிய விவகாரங்களில் இச்சட்டம் சம உரிமைகளை வழங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச அரசு இயற்றி இருக்கும் பொது சிவில் சட்டத்தின்படி திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' உறவில் ஈடுபட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

''ராம் ஆகட்டும் அல்லது ரஹீம் ஆகட்டும், அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வதற்காகவே இந்தப் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது," என்று முதலமைச்சர் மோகன் யாதவ் கூறினார்.

லிவ்-இன்
லிவ்-இன்

அவர் மேலும் கூறுகையில், ''பொது சிவில் சட்டப்படி வாழ்க்கைத் துணை உயிருடன் இருக்கும்போது ஒரு திருமணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாகவே விவாகரத்து செல்லுபடியாகும். திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி முதல் மாநகராட்சி வரையிலான அனைத்து நிலைகளிலும் திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில், பெண்களுக்குப் பாதிப் பங்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த முந்தைய நடைமுறை மாற்றப்பட்டு, இனி மகன்களும் மகள்களும் சம உரிமைகளைப் பெறுவார்கள்.

தனிநபர்கள் எவ்விதக் கட்டாயமுமின்றி சுதந்திரமாக தங்கள் மதசடங்குகளைப் பின்பற்றவும், வழிபாட்டு முறைகள் மற்றும் சம்பிரதாயங்களைப் பின்பற்றவும் சுதந்திரம் உண்டு. மேலும் எந்த மதமும் இழிவுபடுத்தப்படாது.

அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் குறிப்பாக பழங்குடியின குழுக்கள் மீது பொது சிவில் சட்டம் திணிக்கப்படாது" என்று முதலமைச்சர் கூறினார்.

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க