செய்திகள் :

ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?

post image

ரயில்களில் அமருவதற்கு இடம் கொடுக்காமல் இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்களால் பயணிகள் பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தொழில் சார்ந்தும் தொழிலுக்காவும்

சென்னை, திருநெல்வேலி, மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தில்லி, மும்பை என பல்வேறு மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிகள் ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள், பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற் வெள்ளிக்கிழமை மாலை முதல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அதிகயளவில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்திருந்ததால் ரயில் நிலையம் கூட்ட நெரிசலில் பரபரப்பாக காணப்பட்டது.

இதனால் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிக்க |ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு

இதனிடையே வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ரயிலில் சாதாரண பெட்டியில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்தனர். அங்கு ஏற்கனவே இடம் பிடித்து இருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களின் பொருள்கள், உடமைகளை வைத்துக் கொண்டு பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பயணிக்கும் பயணிகளை யாரையும் அமர இடம் கொடுக்காமலும், அது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் தகராறு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பொருட்களை வைத்துக் கொண்டு குழந்தைகள் முதியவர்கள் அமருவதற்கு கூட இடம் கொடுக்காமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட வட மாநிலத்தவரின் செயலைக் கண்ட அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர், வடமாநில ரயில் பயணிகளின் இந்த செயலை தனது செல்போனில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சிடைய வைத்துள்ள.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரது ரயில் பயணமும் இனிமையாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடலை தோண்டியெடுப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெய்யத்திங்கராப் பகுதியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோதமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரண் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் காவ... மேலும் பார்க்க

மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!

மகாராஷ்டிரம், தானேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் "முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக... மேலும் பார்க்க

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க