செய்திகள் :

ரவி மோகன் வீட்டில் திருட்டு: `ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்; 40,000 பணம்' - மேலாளர் புகார்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகனின் நீலாங்கரை இல்லத்தில், வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போனதாக அவரது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதற்கட்டமாக ரூ.3 லட்சம் திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகார் விவரம் மூலம் திருடுபோன பொருளின் மதிப்பு வெளியாகியுள்ளன.

ரவி மோகன்
ரவி மோகன்

நடந்தது என்ன?

நடிகர் ஜெயம் ரவியின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கோகுல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, நடிகர் ரவி மோகன் தனது அறையிலிருந்து பணத்தை எடுத்து வருமாறு மேலாளர் கோகுலிடம் கூறியுள்ளார்.

அவர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் திறந்த நிலையில் கிடந்ததும், அதிலிருந்த பணமும், நகையும் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கோகுல் உடனடியாக இதுகுறித்து ரவி மோகனிடம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் சிக்கியது எப்படி?

பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நடிகர் ரவி மோகன், வீட்டில் பணிபுரியும் அலமேலு மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரிடம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது, வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் சேர்ந்தே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அலமேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

ரவி மோகன்
ரவி மோகன்

இதனடிப்படையில், திருட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜேஷ் (ஓட்டுநர்), சதீஷ் (தனிப்பட்ட உதவியாளர், அலமேலு (வீட்டு வேலைக்காரர்), ராஜேஷ் (தனிப்பட்ட ஓட்டுநர்), வசந்த் (அலமேலுவின் மகன்) உள்ளிட்ட ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் 3 லட்சம் பணம் திருட்டுபோனதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் 40,000 ரொக்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும் காணாமல் போயிருப்பதாகவே ரவி மோகனின் மேலாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamannaah: ``தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" - நடிகை தமன்னா பாட்டியா

திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, 'ஃபோர்ப்ஸ் இந்தியா' சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், ``நான் நடனமாடிய பாடல்களை வெறும் 'ஐட்டம் சாங்ஸ்... மேலும் பார்க்க

கோவாவில் கல்யாணம்... மினிமம் அழைப்பு! குஷ்பு - சுந்தர்.சி வீட்டு மருமகன் ஆகும் ஷ்ரவன் யார்?

37 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த `தர்மத்தின் தலைவன்' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார், குஷ்பு. அப்போது, "தம்பி சைனா பொம்மை மாதிரி செவப்பா ஒரு பொண்ணு நடிக்க வந்திருக்கு. இந்த சினிமா உலகத்து... மேலும் பார்க்க

Dharman: `பேட்ட பத்தல சார், இன்னும் சேர்ந்து நடிக்கணும்னு சொன்னேன்'- ரஜினி குறித்து நெகிழும் சிம்ரன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

"அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

Dharman: "இது '5 ரூபாய் டாக்டரின்' கதையா?!" - ரஜினி படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க