செய்திகள் :

``ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" - கங்கனா ரனாவத்

post image

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த செயலை கண்டித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐபி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள், தூதர்கள், வழக்கறிஞர்கள் என, 204 பேர் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், ``ராகுல் காந்தியைப் பார்க்கும் போது எங்களுக்கு (பெண்களுக்கு) மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. அவர் ஒரு 'தபோரி' (நாடோடி| பொறுப்பற்றவர்) போல நடந்துகொள்கிறார்.

யாரைப் பார்த்தாலும் மரியாதையின்றி ஒருமையில் பேசுகிறார். யாராவது பேட்டி அளித்துக் கொண்டிருந்தால், அவர்களைக் கேலி செய்யும் வகையில் சத்தமிடுகிறார். ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் கண்ணியமான நடத்தையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி ஒரு அவமானம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள் திரண்டு கடிதம் எழுதியிருப்பதும், கங்கனா ரனாவத் அவரை ஒருமையில் விமர்சித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்... மேலும் பார்க்க

State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்... மேலும் பார்க்க

சேகர் பாபு தொகுதியில் ரஜினி ரசிகரை களமிறக்கும் விஜய்? - பின்னணி என்ன?

அமைச்சர் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் குமாரை வேட்பாளராக நிறுத்த தவெக ஆயத்தமாகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆனால், அட்வகேட் ஒருவரும்... மேலும் பார்க்க

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திரும... மேலும் பார்க்க

'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! - அப்செட் சசிகலா?

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங... மேலும் பார்க்க