செய்திகள் :

ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஜலோரா மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த செளதரி சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. காஜிபூர் என்ற கிராமத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த உத்தரவால் பாதிக்கப்படும் பெண்கள் சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் திருமணம், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பக்கத்து வீட்டிற்குச் செல்லும்போது ஸ்மார்ட் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

15 கிராமங்களின் தலைவர் சுஜ்னாராம் செளதரி இந்த தீர்மானத்தை பின்னர் அறிவித்தார். இத்திட்டத்திற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சுஜ்னாராம், ``மொபைல் போன்களால் கண்கள் பாதிக்கப்படுகிறது. அதோடு பெண்கள் எப்போதும் மொபைல் போனில் மூழ்கி இருப்பதால் அவர்களால் அன்றாட வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை. எனவேதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இந்த தடை ஜனவரி 26ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

`உன் சிரிப்பை காணமுடியவில்லை' - ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்' அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்ட... மேலும் பார்க்க

சவூதி தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோ - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் வி... மேலும் பார்க்க

ChatGPT மூலம் உருவான மாப்பிள்ளை! - ஜப்பானில் நடந்த வினோத AI திருமணம்!

ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி (Yurina Noguchi) என்ற பெண், ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025

வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க