செய்திகள் :

ராஜஸ்தான்: ரஜபுத்திரர்களின் முதல் பெண் அரச வாரிசு; 13 வயதில் பொறுப்பேற்ற சிறுமி!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், அரண்மனைகள் என பல நூறு கோடிக்கு சொத்துக்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தில் இருக்கும் கேர்வா என்ற கிராமத்தில் ரஜபுத்திரர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க அரசர் ஒருவர் பெயரளவுக்கு இருக்கிறார். சமீபத்தில் அரச குடும்ப பொறுப்பாளராக இருந்த ஹரிஷ் சந்திர ஜோதா காலமானார்.

அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. 13 வயதில் தேஜஸ்வி குமாரி என்ற மகள் மட்டும் இருந்தார். வழக்கமாக இந்த பதவிகளை ஆண் வாரிசுகள்தான் ஏற்பது வழக்கம். ஆனால் ஹரிஷ் சந்திராவிற்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அவரது 13 வயது மகள் மன்னர் குடும்ப வாரிசாக நியமிக்கப்பட்டார்.

இதற்கான சடங்குகள் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜஸ்தான் கோட்டையில் நடந்தது. பாக் கா தஸ்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் துக்கம் முடிந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக சிறுமிக்கு பிங்க் கலர் தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.

அந்த தலைப்பாகை ஜோத்பூர்-மார்வார் அரச குடும்பத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பெண் ஒருவர் ரஜபுத்திரர்களின் அரச குடும்ப வாரிசாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஒரு காலத்தில் ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பாலியின் சில பகுதிகளில் பாரம்பரியமாக ஒரு குடும்ப தலைவரின் மரணத்திற்குப் பிறகு தலைமை மற்றும் பொறுப்பை மாற்றுவதைக் "பாக் கா தஸ்தூர்" குறிக்கிறது.

இருப்பினும் அது வரலாற்று ரீதியாக ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் கடந்த 65 ஆண்டுகளாக இப்பதவி மாற்றுதல் நடைபெறாமல் இருந்தது. 7வது வகுப்பு படிக்கும் தேஜஸ்வி தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவார். அதோடு அப்பதவிக்கான பொறுப்புகளையும் சேர்த்து செய்வார் என்று கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் ப... மேலும் பார்க்க

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க