செய்திகள் :

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

post image

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.

விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் கோயிலுக்குள் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பட்டாடைகள் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்

.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும். இந்த எண்ணிக்கை பணியில் கோயில் ஊழியர்கள் தவிர ஆன்மிகக் குழுக்களைச் சேர்ந்த பக்தர்கள், பள்ளி மாணவிகள் எனப் பலரும் ஈடுபடுவர்.

கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் திருச்சி துறையூர் கைலாச நாதர், சிவகாமசுந்தரி ஆன்மிக அன்பர் குழுவைச் சேர்ந்த 118 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த துறையூர் ஆளத்துடையான் பட்டியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் காணிக்கைப் பணத்தைத் திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்தது கோயில் அதிகாரியின் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரியவந்தது.

இதனைக் கண்ட அதிகாரிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பிரபாவதியைச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த கோயில் காணிக்கைப் பணம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 670 ரூபாய் சிக்கியது.

திருட்டில் ஈடுபட்ட பிரபாவதி
திருட்டில் ஈடுபட்ட பிரபாவதி

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் கடந்த 6 மாதங்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது காணிக்கைப் பணத்தைத் திருடிய மணிகண்டன் என்பவர் சிக்கினார். கோயில் தூய்மை பணியாளரான இவர் பல முறை இது போன்று காணிக்கை திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கோயில் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்திருந்த ஆன்மீக குழுவைச் சேர்ந்த சிவபக்தையே சிவனது காணிக்கைப் பணத்தினைக் களவாடிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க