செய்திகள் :

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு வித பயத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு போதைப்பொருள் அல்லது வயாகரா ஜூஸ் கலந்த பானத்தை குடிக்க கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

கர்ப்பமான பெண்களை கூட விட்டுவைக்காமல் குழந்தை நலமுடன் பிறக்க பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு கர்ப்பிணி பெண் அசோக்கிற்கு எதிராக கொடுத்துள்ள புகாரில், தனது கணவரை அறைக்கு வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பூஜை என்ற பெயரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் பல பெண்கள் தொடர்ந்து ஜோதிடருக்கு எதிராக புகார் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமானுஷ்ய அலுவலகம்

கேப்டன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அசோக்கிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் பெண்களை எப்படி மயக்கினார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மூடநம்பிக்கை மற்றும் பயத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கானோரை தனது வலையில் விழவைத்துள்ளார். அசோக்கின் அலுவலகம் அமானுஷ்ய அதிர்வை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு

அதோடு அசோக் ஹிப்னாடிசம் போன்ற வேலைகளையும் செய்துள்ளார். தனது சொல்படி நடந்து கொள்ளாதவர்களிடம் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி இருக்கிறார். தனது அலுவலகத்தில் ரிமோட் கன்ட்ரோல் பாம்புகளைப் பயன்படுத்தி தனக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களை நம்பவைத்தார். புலித் தோல்கள் மற்றும் பிற வனவிலங்கு கலைப்பொருட்களை தனது அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துவது போன்ற வேலையில் ஈடுபட்டார்.

மேலும் சிலரிடம் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறி புளிக்கொட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வைத்துள்ளார். வாடிக்கையாளர்களின் நிதிநிலையை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி வெறும் ரூ.100 மதிப்புள்ள பொருட்களை ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு வாங்கும்படி செய்துவிடுவார். அவர் தனது வாடிக்கையாளர்களிடம் தெய்வீக குணப்படுத்தும் சக்தி இருப்பதாகக் கூறி போலி ரத்தினக் கற்களை வாங்கும்படி கூறி ஏமாற்றினார்.

150 முறை வெளிநாட்டு பயணம்

பொதுமக்களிடம் மோசடியாக சம்பாதித்த பணத்தில் அசோக் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். தென்கொரியாவிற்கு தனது குடும்பத்தோடு சென்ற வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. மொத்தம் 150 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்து இருக்கிறார்''என்று தெரிவித்தனர்.

அசோக் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு இஷானேஷ்வர் மகாதேவ் கோயிலின் அறக்கட்டளையுடன் தொடர்புள்ளதைக் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. நாசிக் அருகில் உள்ள மிர்கானில் இருக்கும் மகாதேவ் கோயிலை நடத்தும் அறக்கட்டளை தலைவராக அசோக் இருக்கிறார்.

அசோக்கிற்கு சொந்தமாக பண்ணை வீடும், பங்களாவும் இருக்கிறது. அவர் மகாராஷ்டிரா முழுவதும் 50க்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அசோக்கிற்கு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரூபாலி பெண்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண... மேலும் பார்க்க