ஏப்.1 முதல் கா்நாடகத்தில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயா்வு
ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!
ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சீசன் வரை தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தனித்துவமான வீரர்
விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்ஷர் படேல்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர். அவர் பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்கும் மிகவும் தனித்துவமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஷும் சிறந்த வீரர். அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது பல இளம் விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் ராம்தின் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.