செய்திகள் :

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

post image

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அவரின் சொத்து கணக்கு விவரம் வெளியாகி உள்ளது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவிதான் லீமா ரோஸ். அவரது குடும்பத்தினர், வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். அ.தி.மு.க-வில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், லீமா ரோஸ் நேற்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தமிழநாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக அவர் இருக்கிறார். வேட்பாளர் பெயரில், 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவர் கணவர் பெயரில் 3,262 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அதேபோல், வேட்பாளர் பெயரில் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் உள்ளன.

லீமா ரோஸ்

அவர் கணவர் மார்ட்டின் பெயரில் 887 கோடி ரூபாய் மதிப்புக்கு கட்டடங்கள், நிலம் ஆகியவை உள்ளன. இது தவிர, அவர் மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரிலும் ரூ. 662 கோடி மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. மொத்தத்தில், லால்குடி வேட்பாளர் லீமா ரோஸ் பெயரில் அசையும், அசையா என ரூ.1048 கோடி சொத்து மதிப்பும், அவர் கணவர் மார்ட்டின் பெயரில் அசையும், அசையா என ரூ.4149 கோடி சொத்து மதிப்பும், மகன் பெயரில் ரூ.662 கோடி என  மொத்தம் அவரது குடும்ப சொத்தாக கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்து உள்ளார். அப்படி, அவர் தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு விவரங்களின்படி தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தான் என்பது தெரியவந்துள்ளது.

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்...' - வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள... மேலும் பார்க்க

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தத... மேலும் பார்க்க

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் ... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை ம... மேலும் பார்க்க