செய்திகள் :

ரூ.167 கோடிக்கு விற்பனையான ராஜா ரவிவர்மா ஓவியம்: இந்தியக் கலை உலகில் புதிய சாதனை!

post image

அது ஒரு விறுவிறுப்பான கலைப்பொருள் ஏலக் கூடம். அனைவரின் பார்வையும் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தின் மீதுதான் நிலைத்திருந்தது. அது சாதாரண ஓவியம் அல்ல, இந்தியாவின் ஈடு இணையற்ற ஓவியரான ராஜா ரவிவர்மா தனது தூரிகையால் உயிர் கொடுத்த `யசோதை கிருஷ்ணன்' ஓவியம். ஏலம் கேட்கும் போட்டி சூடுபிடிக்க, இறுதியில் அந்த ஓவியம் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.167.2 கோடிக்கு (சுமார் 18 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இதன் மூலம், நவீன இந்தியக் கலை வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற மாபெரும் சாதனையை இது படைத்துள்ளது.

ravi varma
ravi varma

சாஃப்ரான்ஆர்ட் (Saffronart) நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், இந்த ஓவியத்தை வாங்கியவர் பிரபல தொழிலதிபரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் எஸ். பூனாவாலா. இதற்கு முன்பு எம்.எஃப். உசேன் அவர்களின் `அன்டைட்டில்ட் (கிராம் யாத்ரா)' ஓவியம் ஒன்று கடந்த ஆண்டு ரூ.118 கோடிக்கு விற்கப்பட்டதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரவிவர்மாவின் 'யசோதை-கிருஷ்ணன்' முறியடித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தின் முடிவில் அது இருமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை வாங்கியது குறித்துப் பேசிய பூனாவாலா, "இது ஒரு தேசியப் பொக்கிஷம். இதனை என் வசம் வைத்திருப்பதை ஒரு பொறுப்பாகவே கருதுகிறேன். பொதுமக்கள் இந்த ஓவியத்தை அவ்வப்போது பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே எனது நோக்கம்" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ravi varma painting
ravi varma painting

ஓவியத்தின் சிறப்பு:

1890-களில், ரவிவர்மா தனது கலைத்திறனின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டது. யசோதையின் தூய்மையான தாய்மையின் அன்பையும், குழந்தை கிருஷ்ணனின் வசீகரத்தையும் இதிகாசப் பின்னணியில் மிகத் தத்ரூபமாக ரவிவர்மா இதில் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று இந்தியர்கள் பலரும் தங்களின் மனதில் சரஸ்வதி, லட்சுமி, ராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களை எப்படி உருவகப்படுத்தி வணங்குகிறார்களோ, அந்த அழகிய உருவங்களை வடிவமைத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்த பெருமை ரவிவர்மாவையே சேரும்.

எழுத்தாளர் நிஜந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜந்தன் (31). இவர் ’பிறழ்’ என்ற சிறுவயது பாலியல் அத்துமீறல் காரணமாக அகச்சிதைவு ஏற்படும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை பேசும் குறுநாவல் மூலமாக கவனத்தைப் பெற்ற... மேலும் பார்க்க

எங்களுக்கான பெரிய திருப்புமுனையா இந்தக்கண்காட்சி அமைஞ்சிருக்கு - நெகிழும் கவின்கலை மாணவர்கள்

சென்னை கவின்கலைக் கல்லூரியில் துகிலியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின்படாம் என்ற டெக்ஸ்டைல் கண்காட்சி கடந்த ஒருவாரமாக ஏப்ரல் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

'இந்த சமூகம் பார்க்க மறுக்கிற மனிதர்களை அவங்க ரியல் தன்மையோட காட்டணும்' - ஓவியர் சத்ய பிரியா!

மதுரையைச் சேர்ந்த ஓவியர் சத்ய பிரியா இன்ஸ்டாகிராமில் ‘மேகதூதம்’ என்ற பெயரில் அறியப்படுபவர். இவருடைய உழைக்கும் மக்கள் சார்ந்த ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆகவே, இவரின் கலைச் சார்ந்த செயல்பாடுகள் குறித்த... மேலும் பார்க்க