செய்திகள் :

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

post image

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் ரிஷிகேஷ் நகரில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இன்று அதிகாலையில் ராஜஸ்தான் மாநிலம் தவுஷா என்ற இடத்தில் வந்தபோது டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பஸ்ஸில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டதும் இரண்டுமே தீப்பிடித்துக்கொண்டன. இதனால் தீயில் கருகி பயணிகள் உயிரிழக்க நேரிட்டது.

தீப்பிடித்த வாகனங்கள்
தீப்பிடித்த வாகனங்கள்

பஸ் படுக்கை வசதி கொண்டது ஆகும். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டபோது பஸ்ஸின் மேல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மற்ற 5 பேர் தீக்காயத்தால் இறந்தனர். தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் இரண்டு வாகனத்திலும் பிடித்த தீயை அணைத்து உள்ளே சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்த பிறகே தீயணைப்புத் துறையினர் வந்தனர் என்றும், அதனால்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதோடு பஸ்ஸில் அதிக அளவு சிகரெட் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும், எனவே தீ பஸ்சில் வேகமாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நெடுஞ்சாலை என்பதால் டிரைவர் மிகவும் வேகமாக பஸ்ஸை ஓட்டியதாகவும், டிரைவர் பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தபோது உறங்கியதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க