செய்திகள் :

வகுப்பறையில் மாணவியிடம் 'ஐ லவ் யூ' சொன்ன பேராசிரியருக்குச் செருப்படி; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

பெங்களூருவில் உள்ள நிலமங்களா பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் அப்துல். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு மாணவியிடம் ஐ லவ் யூ என்று சொன்னார்.

இதனால் மாணவர்கள் அதிர்ச்சியுடன் பேராசிரியைப் பார்த்தனர். சம்பந்தப்பட்ட மாணவி பேராசிரியரின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியில் செல்ல முயன்றார். அவரை மடக்கி மாணவி வாக்குவாதம் செய்தார். அப்போது மாணவியைப் பார்த்து, ''நீ என்னிடம் ஐ லவ் யூ சொல்லவில்லையா?'' என்று கேட்டார் பேராசிரியர்.

மாணவி வாக்குவாதம்
மாணவி வாக்குவாதம்

அதற்கு மாணவி அப்படி தான் எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தார். உடனே, ''உனக்கு என் மீது விருப்பம் இருக்கிறது. அதனைக் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்'' என்று தெரிவித்தார்.

அம்மாணவியும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார். அவர் வெளியில் சென்ற பிறகு இது குறித்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மாணவர்கள் மீண்டும் பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் மடக்கி இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அந்நேரம் சம்பந்தப்பட்ட மாணவி தனது செருப்பை எடுத்து பேராசிரியரை அடித்தார். மற்ற மாணவர்களும் பேராசிரியரை விரட்டி விரட்டி அடித்தனர்.

இச்சம்பவத்தை மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக யாருமே போலீஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். பேராசிரியர் மாணவியிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் சாக்லேட் கொடுக்க முடிவு செய்து ஒரு பெட்டி முழுக்க சாக்லேட்டும் வாங்கி கொண்டு வந்திருந்தார்.

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் - viral video

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில், நாய் இறைச்சி கடைக்காக கடத்திச் செல்லப்பட்ட ஏழு வளர்ப்பு நாய்கள், ஓடும் லாரியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, சுமார் 17 கிலோமீட்டர் தூரம் ஒன்ற... மேலும் பார்க்க

`161 பேர், 363 மணிநேரத்தில் உருவாக்கியது' - பார்ட்னருக்கு நடிகர் ஆமிர் கானின் காதல் பரிசு!

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்.தனது 60-வது வயதில்தான் ... மேலும் பார்க்க

'மோசமான முறையில் நடந்துகொண்டார்' - இயக்குநர் பாலியல் தொல்லை அளித்ததாக மோனாலிசா போஸ்லே குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர... மேலும் பார்க்க

`20 முறை முயற்சி செய்தும் வேகவில்லை' - இறைச்சி வேகவில்லை என்று கூறி போலீஸாருக்கு வந்த நூதன புகார்!

போலீஸாருக்கு எத்தனையோ விதமான நூதன புகார்கள் வருவதுண்டு. அதனையும் சமாளித்து தீர்த்து வைப்பதுதான் போலீஸாரின் வேலையாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒருவர் கொண்டு வந்த புகாரை கண்டு போலீஸார் அதிர்ச்சியடை... மேலும் பார்க்க

ஹிமாச்சல்: 6 மாதங்களுக்கு முதல்வர், எம்.எல்.ஏ, அதிகாரிகள் சம்பளத்தின் ஒருபகுதி நிறுத்திவைப்பு!- ஏன்?

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நிதிநிலையை சரி செய்ய அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வை... மேலும் பார்க்க

தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலை... மேலும் பார்க்க