செய்திகள் :

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

post image

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர்.

'ஏஎப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக்' இறுதிப்போட்டியில், ஜப்பானின் டோக்கியோ வெர்டி பெலெஸா அணியை 1-0 என வீழ்த்தி வடகொரியாவின் 'நேகோஹியாங் மகளிர் எஃப்சி' சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இக்கோப்பையைக் கைப்பற்றிய முதல் வடகொரிய கிளப் என்ற பெருமையைப் பெற்ற இந்த வீராங்கனைகளை கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து வாழ்த்தியபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பியொங்யாங்கில் நடைபெற்ற ஒரு சிறப்புப் பாராட்டு நிகழ்ச்சியில், சாம்பியன்ஸ் லீக் வென்ற நேகோஹியாங் அணியினருடன், சமீபத்தில் 2026 ஏஎப்சி யு-17 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற வடகொரியாவின் இளம் தேசிய மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர். அவர்களை முகம் நிறையப் புன்னகையுடன் பாராட்டிய கிம் ஜாங் உன், கைகளைக் குலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தென்கொரியாவில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நேகோஹியாங் வீராங்கனைகள் வடகொரியாவின் தேசியக் கொடியை மைதானத்தில் ஏந்தி ஓடிக் கொண்டாடினர். தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி வடகொரியக் கொடி அங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டாலும், மைதானத்தில் இருந்த சுமார் 1,200 தென்கொரிய ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும், தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கும் வடகொரிய மகளிர் அணியின் இந்த வரலாற்றுச் சாதனைக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று வெற்றியைப் பற்றிப் பேசிய நேகோஹியாங் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரி யு இல், தங்களது சாதனைக்கு அதிபர் கிம் ஜாங் உன் வழங்கிய எல்லையற்ற அன்பும், ஊக்கமும்தான் முக்கியக் காரணம் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான சர்வதேசத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், விளையாட்டுத் துறையில் வடகொரியப் பெண்கள் உலக அரங்கில் தங்களது நாட்டின் கொடியை உயர்த்தி சாதித்து வரும் இந்தத் தொடர் வெற்றிகள், அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" - உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந... மேலும் பார்க்க