செய்திகள் :

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா!

post image

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று (ஜூலை.29) நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.

நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்

இதன் மூலம் வந்தே மாதரம் பாடலை வேண்டும் என்றே தடுப்பது அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இந்த மசோதாவின் மூலம் குற்றமாக கருதப்படும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியக்கொடி
தேசியக்கொடி

இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாகும். இந்த மசோதா மூலம் 'வந்தே மாதரம்' தேசியக் கொடி, தேசியக் கீதத்துக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க