செய்திகள் :

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

post image

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்தத் தொடர் மழை காரணமாக மேப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒருசில இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு வந்த நிலையில், அனக்கம்பொயில் - மேப்பாடி இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நுழைவு வாயில் பகுதியில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களும் மண்சரிவில் சிக்கியுள்ளன.

வயநாடு நிலச்சரிவு

சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இதனால் மண்ணுக்கடியில் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மண்சரிவில் சிக்கிய 5 நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்துள்ள நபர்களைத் தேடி கண்டறிந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரள மாநில அமைச்சர் டி. சித்திக் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் நிலைமையை தொலைபேசி மூலம் கேட்டறிந்து, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மேலும், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்களை உடனடியாக வயநாட்டிற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்; கேரளாவில் மீண்டும் சோகம்

கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'ஆனக்கம்பொயில் - மேப்பாடி' சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மற்றும் வயநாடு இடையே... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள... மேலும் பார்க்க

திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழி... மேலும் பார்க்க

லாரி மீது பஸ் மோதி விபத்து; தீப்பிடித்தில் 7 பேர் பலி; பஸ்ஸில் சிகரெட் ஏற்றிச்சென்றதுதான் காரணமா?

மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில்... மேலும் பார்க்க

குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; வீடியோ மோகத்தால் நிகழ்ந்த துயரம்

காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காவிரி ஆறுகர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க