செய்திகள் :

வாணியம்பாடி: திருநங்கையைத் தாக்கிய இளைஞன் கைது; ஓராண்டு திருமண வாழ்க்கை; ஊர் சுற்ற பைக்

post image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

எந்த வேலைக்கும் செல்லாத வல்லரசு ஊர் சுற்றுவதற்காக பைக் வாங்கிக்கொடுத்து, தினமும் செலவுக்கு பணமும் கொடுத்திருக்கிறார் திருநங்கை பூமிகா.

இந்த நிலையில், சமீபகாலமாக ஒரு பெண்ணுடன் வல்லரசு தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், பூமிகாவுக்குத் தெரியவந்ததையடுத்து, வல்லரசுடன் அவர் சண்டைப் போட்டிருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான தகராறு அதிகமானதால், பூமிகா விலகி இருந்திருக்கிறார். ஆனாலும், பூமிகாவிடம் தொந்தரவில் ஈடுபட்டு வந்திருக்கிறார் வல்லரசு.

வல்லரசுடன் திருநங்கை பூமிகா
வல்லரசுடன் திருநங்கை பூமிகா

இந்த நிலையில்தான் 26-ம் தேதி இரவு பூமிகாவுக்குப் போன் செய்த வல்லரசு, `நேர்ல பேசணும் வா’ என்றுகூறி ஒரு வீட்டுமனை பகுதிக்கு அழைத்திருக்கிறார். திருநங்கை பூமிகாவும் தனியாகச் சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த வல்லரசு ஆத்திரப்பட்டு பூமிகாவைத் தாக்கியிருக்கிறார்.

தகாத வார்த்தைகளால் கடுமையாகப் பேசி, மதுபாட்டிலை உடைத்து குத்தியிருக்கிறார். இதில், பூமிகாவுக்கு தாடைப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. பலத்த காயமடைந்த அவர் கதறித் துடித்ததால், வல்லரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, தனது சகோதரனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார் பூமிகா. அவர் உறவினர்களுடன் விரைந்து வந்து பூமிகாவை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். பிறகு, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தப்பிஓடிய வல்லரசை சக திருநங்கைகளே தேடிப்பிடித்து வாணியம்பாடி நகரக் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து வல்லரசைக் கைது செய்தனர்.

வல்லரசுடன் திருநங்கை பூமிகா
வல்லரசுடன் திருநங்கை பூமிகா

இதைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ``கடந்த ஏப்ரல் மாதம், தார்னிகா என்ற திருநங்கையும் காதலித்து ஏமாற்றப்பட்ட மனவேதனையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இப்போது ஒரு திருநங்கை கொலை முயற்சியில் படுகாயமடைந்திருக்கிறார்.

இந்த வழக்கை திரும்பப் பெறக்கோரி, வல்லரசின் தாய்மாமன் போன் மூலம் மிரட்டுகிறார். திருநங்கைகள் சமுதாயத்துக்குப் பாதுகாப்பில்லை’’ என்றனர். போலீஸார் சமரசம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க