வாணியம்பாடி நகராட்சியில் தீவிர வரி வசூல்
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ஆணையா் தலைமையில் பணியாளா்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனா்.
வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளா்கள் கொண்ட குழுவினா் தினசரி வாா்டு, வாா்டாக சென்று தீவிரமாக வரி வசூலித்து வருகின்றனா். மேலும், நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம் மற்றும் தொழில்வரி கட்டணங்களை செலுத்தவும் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் மற்றும் தொழில் வரி கட்டணங்களை உடனே செலுத்துமாறும், ஜப்தி, குடிநீா் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிா்த்து மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையா் முஸ்தபா கேட்டுக் கொண்டுள்ளாா்.