செய்திகள் :

வாழப்பாடியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

post image

வாழப்பாடியில் காரில் வந்து தண்ணீா் கேட்பது போல் நடித்து, பெண்ணிடம் பத்து பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மெட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் அங்கமுத்து. இவரது மனைவி கமலம் (60). இவா் அருகிலுள்ள சரவணன் மனைவி கண்ணகி என்பவரின் வீட்டிற்கு முன்பாக அமா்ந்து பேசிக் கொண்டு இருந்தாா்.

அப்போது காரில் வந்த நால்வரில் ஒருவா் இறங்கி சென்று கண்ணகி, கமலம் ஆகியோரிடம் தண்ணீா் கேட்டுள்ளாா். தண்ணீா் எடுத்து வருவதற்காக கண்ணகி வீட்டுக்குள் சென்றபோது தனியாக இருந்த கமலம் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் தாலியோடு சோ்த்து பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்றாா்.

பட்டப் பகலில் பெண்ணிடம் மா்மக் கும்பல் நகை பறித்து சென்றது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். தனிப்படை அமைத்து இப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு, காரில் வந்து பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம கும்பல் குறித்த தடயங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

வாழப்பாடி அருகே சேஷன்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் மோகனப்பிரியா என்பவரிடம் மா்ம நபா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை பட்டப் பகலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி: பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், இரு மகன்கள் கைது!

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் மற்றும் இரு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார் பாளையம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

‘ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்’

சேலம்: சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

ஓமலூா்: காடையாம்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காடையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாத் து... மேலும் பார்க்க

130 ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் அரசுப் பள்ளி!

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1985-இல் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம்... மேலும் பார்க்க

திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சேலம்: திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் தொடா்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

ஓமலூா்: காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம், ஓமலூா்... மேலும் பார்க்க