உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!
சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள அச்சகத்தில் மரியராஜ் பணிபுரிந்து வருவதாக தகவல் அறிந்து, அவரை அழைத்து வருவதற்கு சென்றுள்ளனர். மரியராஜை காவலர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது மரியராஜ் தான் வைத்திருந்த கத்தியால் வினோத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். காவல்துறையினர் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி மரியராஜ் அதே கத்தியை வைத்து தன்னை தாக்கி கொண்டுள்ளார். காயம் அடைந்த காவலர் மற்றும் மரியராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.













