செய்திகள் :

விஜயபாஸ்கர் கோட்டையில் வேலுமணியின் `ஆள்' - எடப்பாடியால் என்ட்ரி ஆகும் வி.பழனிவேல் பின்னணி என்ன?

post image

அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பல அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார்.

அந்த அடிப்படையில் புதுக்கோட்டை அ.தி.மு.க-வில் ‘பவர்ஃபுல்’ புள்ளியாக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு செக் வைத்து, வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வி.பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புதுக்கோட்டை எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் 50 வயது பழனிவேல், வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். இவருக்கு பெரிய தொழில் சாம்ராஜ்யம் உண்டு. கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ‘வலதுகரமாக’ வலம் வந்தவர்.

கடந்த 2024 நவம்பரில் இவரது வீடுகளில் அமலாக்கத்துறை (ED) சல்லடை போட்டாலும், எடப்பாடியின் ‘குட்புக்’கில் இடம்பிடித்து இப்போது மாவட்டப் பொறுப்பைத் தட்டியெடுத்துள்ளார்.

இவரது சகோதரர் வி.முருகானந்தம் பா.ஜ.க-வில் முக்கியப் புள்ளியாக இருப்பது அரசியல் ரீதியாகக் கவனிக்கத்தக்கது. சமீபகாலமாக புதுக்கோட்டையில் அதிமுக கூட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

வி.பழனிவேல்
வி.பழனிவேல்

மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசிக்கும் இவருக்கு, கடந்த தேர்தலில் சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் இவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. இப்போதைய கட்சி சூழலால் எடப்பாடியின் அதிரடி வியூகத்துடன் புதுக்கோட்டை வடக்கு மா.செ.பதவியுடன் என்ட்ரி கொடுத்துள்ளார் வி.பழனிவேல்.

சி.விஜயபாஸ்கரின் கோட்டையில் வேலுமணியின் ஆளாக வலம் வந்து தற்போது எடப்பாடியின் முகாமில் மா.செ.வாக மாறியிருப்பதுதான் புதுக்கோட்டை அ.தி.மு.க-வின் லேட்டஸ்ட் அதிரடி..!

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எ... மேலும் பார்க்க

"மகளிர் உரிமைத்தொகை விரைவில் நேரடியாக வரவு; மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை" - தமிழ்நாடு அரசு

2021 டு 2026 திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதே இந்தத் திட்டம். தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில... மேலும் பார்க்க

'நாங்கதான் ஒரிஜினல் அதிமுக!' - சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக-வின் கோஷ்டிகள்!

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி இரண்டாக பிளவு பட்டு நிற்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இரு கோஷ்டியினரும் சபாநாயகரை சந்தித்து 'நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுகவினர்!' என உர... மேலும் பார்க்க

தொடரும் முந்தைய அரசின் திட்டங்கள்; புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் ரூ.1000 வரவு வைப்பு - TN Live Updates

தொடரும் முந்தைய அரசின் திட்டங்கள்; புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் ரூ.1000 வரவு வைப்பு!விஜய்புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்த... மேலும் பார்க்க

`இறந்த பிறகும் கூட... பிணைக் கைதிகள் மீது கொடூர `பாலியல் வன்முறை' - இஸ்ரேலிய அறிக்கையில் அதிர்ச்சி

இஸ்ரேல் மீது ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலின்போதும், அதன் பிறகு பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீதும் திட்டமிட்ட, பரவலான பாலியல் வன்முறைகள் அரங்கேற்றப்பட்... மேலும் பார்க்க