செய்திகள் :

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

தவெக - விஜய்
தவெக - விஜய்

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், " இது பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்குக் கூட எனக்கு தெரியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. அவ்வளவு பேரும் பொய் தான் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் தினமும் கொலைகள் நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இதை ஆளும்கட்சிதான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சாதானே. நான் நாட்டு மக்களுக்கு என்னென்ன நடக்கிறது என்று சொல்கிறேன்.

உங்களுக்கு ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதுதான். விஜய் கூட்டணிக்குள் வருகிறாரா? என்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" - அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்த... மேலும் பார்க்க

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந... மேலும் பார்க்க

'ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?'- அன்புமணி கேள்வி

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்கள் தேவா, ஜீவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வ... மேலும் பார்க்க

சுயேட்சையிடம் டெபாசிட் இழந்த திமுக; நோட்டாவுக்கு பின்னால் பாஜக; அதிமுக அவுட்! | RK நகர் ஆடுபுலி 09

அரசியல் ஆடுபுலி 09மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த வி.கே.சசிகலா 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப... மேலும் பார்க்க