செய்திகள் :

"விஜய் சாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால்.! - இயக்குநர் சுதா கொங்கரா

post image

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது.

அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 'பராசக்தி' படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியாகவில்லை.

பராசக்தி
பராசக்தி

இந்நிலையில் விஜய் குறித்து சுதா கொங்கரா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சுதா கொங்கரா, "எனக்கு விஜய் சாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

விஜய் சாரிடம் இதனை நேரடியாகவே நான் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

இசை வெளியீட்டு விழாவிலே விஜய் சாருடைய 'ஜனநாயகன்' படத்தை நான் FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக சொல்லி விட்டேன்.

'ஜன நாயகன்'
'ஜன நாயகன்'

அந்த படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்சார் போர்டு இவ்வாறு செய்தது தவறு. எந்தவொரு படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது.

'ஜனநாயகன்' படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டுமென்று நினைக்கவே இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவைப்பட்டது. அவ்வளவுதான்" என்று பேசியிருக்கிறார்.

டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம்!

படத்துக்கு படம் வித்தியாசமான கதைகள், ஜானர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரவி மோகன், இந்தாண்டும் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கிறார். இப்போது நடிப்போடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் அவர் கூடுதல் புரொம... மேலும் பார்க்க

"இந்த சீமான் தான் அந்த செழியன்; தம்பி சிவகார்த்திகேயன்.!' - 'பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பராசக்தி' படத்தைப் பார்த்த நாம் கட்சி தலைவர் சீமான் பாராட்டியிருக்கிறார். செய்தியாளர்... மேலும் பார்க்க

"என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம்" - அஜித் குமார்

24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது.ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது.அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ... மேலும் பார்க்க

``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை" - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'.லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.... மேலும் பார்க்க

தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க"- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!

ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவ... மேலும் பார்க்க