செய்திகள் :

"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?

post image

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.

இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும்.

பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம்.

ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும்.

Rss
Rss

எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்எஸ்எஸ் வேலை இல்லை. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும்" என்று பேசியிருக்கிறார்.

ஓய்வூதியத் திட்டம்: "அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?" - அன்பில் மகேஸ்

"2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்?" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்... மேலும் பார்க்க

கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப... மேலும் பார்க்க

'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டிய... மேலும் பார்க்க

'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்

பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ... மேலும் பார்க்க

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது ப... மேலும் பார்க்க