செய்திகள் :

'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

post image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ராஜீவ் சந்துரசேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த ராஜேந்திரன்

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், "நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது.

ஆனால், சி.பி.எம் கிளைக் கமிட்டி இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தவில்லை. என்னை தொல்லை செய்ய வேண்டாம் என அடிக்கடி கேட்டுக் கொண்டேன். பல சிரமங்களை சகித்துக்கொண்டேன். நான் யாரையும் பா.ஜ.க-வுக்கு இழுக்கவில்லை. நான் சார்ந்திருந்த கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்" என்றார்.

பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல் ஏ

ராஜேந்திரனுடன் சி.பி.எம் பிரமுகர் சந்தோஷ், சி.பி.ஐ நிர்வாகி குருநாதன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். வரும் 8-ம் தேதி இடுக்கியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலா... மேலும் பார்க்க

கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப... மேலும் பார்க்க

'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்

பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ... மேலும் பார்க்க

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது ப... மேலும் பார்க்க

ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்... மேள தாளத்துடன் உற்சாகம்! - Album

ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109... மேலும் பார்க்க