செய்திகள் :

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

post image

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு கம்பெனியில் தங்கியிருந்து அப்பளம், கடலை மிட்டாய் மற்றும் திண் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால், தேவர்குளத்தில் தந்தை ராமராஜும், மகள் ராதிகாவும் தங்கியிருந்துள்ளனர்.

தேவர்குளம் காவல் நிலையம்
தேவர்குளம் காவல் நிலையம்

இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக கடந்த 20 நாள்களுக்கு முன்பு சவுந்தரியும், கண்ணனும் தேவர்குளத்திற்கு வந்துள்ளனர். ராதிகாவின் உறவினர் ஒருவர் அதே ஊரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ராதிகாவும், அவரது உறவினரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த விவகாரம் ஊருக்கு வந்த தாய் சவுந்தரி மற்றும் தம்பி கண்ணனுக்குத் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத ராதிகா தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால், கண்ணனுக்கும் ராதிகாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு சவுந்தரி மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் அருகில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்குச் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ராதிகா மீண்டும் அந்த உறவினரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த கண்ணன், ராதிகாவிடமிருந்து செல்போனைப் பிடுங்கியதுடன் கண்டித்தாராம். மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, ராதிகாவை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தேவர்குளம் காவல் நிலையம்

இதில் முகம், கழுத்து, கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட தெரு மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் கண்ணன், தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து... மேலும் பார்க்க

UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார். ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற ராம் சிங் மகன் நிதின், மினி வேன் ஒன்றில்... மேலும் பார்க்க

பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!

பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்டாட்டம்

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரின் நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார். இவர்கள் மூன்று பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் ... மேலும் பார்க்க

சென்னை: நண்பரின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த காதலி; நண்பரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்

சென்னை, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா (24). கார்த்திக்கும் சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அருணும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர்.அர... மேலும் பார்க்க

நெல்லை: பாஜக நிர்வாகியின் மாமியாரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளை; எச்சரிக்கும் போலீஸ்; என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இதனால், ... மேலும் பார்க்க