நெருக்கும் திமுக... சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறாரா திருமாவ...
"விஜய் சார் போன்ற தோற்றம் வருமிடங்கள்.!" - விஜய் பற்றி நடிகர் நட்டி
தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.
நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

அந்த டீசர் வெளியானது முதல், இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றிய படம் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
படத்தைப் பற்றி இணையத்தில் பேசப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாகவும் படக்குழுவினரும் இந்நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார்கள்.
நட்டி, "இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை.
இந்தப் படத்தின் நோக்கமே, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும் சிரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

விஜய் சாரின் தோற்றம் வரும் இடங்கள் படத்தின் சின்ன போர்ஷன்தான். அதைத் தவிர இன்னும் நிறைய லுக் நாங்கள் செய்திருக்கோம். விஜய் சார் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
அவரை அப்படி டீஃபேம் செய்யக்கூடிய எண்ணம் எனக்கும், எங்களுடைய படக்குழுவுக்கும் கிடையாது. படம் பார்த்தால், நாங்கள் செய்திருக்கிற விஷயம் என்னவென்று உங்களுக்கு புரியும்." எனப் பேசியிருக்கிறார்.













