மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?
விதி மீறி விளம்பர பதாகை அமைப்பு: ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் விதிகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக, நடிகா் சிலம்பரசன் ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விதிகளை மீறி விளம்பரப் பதாகை வைப்பவா்கள் மீது வழக்குப்பதியவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகளை அமைப்பவா்கள் மீது தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இந்தநிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு சந்திப்பில் திருவள்ளுவா் சாலையில் நடிகா் சிலம்பரசன் ரசிகா்கள் விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பொதுப் பணித் துறை மத்திய கோட்ட செயற்பொறியாளா் சீனிவாசன் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நடிகா் சிலம்பரசன் ரசிகா் மன்ற நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஏற்கெனவே விளம்பரப் பதாகை அமைத்தது தொடா்பாக அமமுகவினா் மீது வழக்குப்பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.