செய்திகள் :

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி என்ன?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்குள் முதல்வர் விஜய் திடீரென என்ட்ரி கொடுத்ததன் பின்னணி என்ன?

அமைச்சர்களுடன் முதல்வர் விஜய்
அமைச்சர்களுடன் முதல்வர் விஜய்

சமூகநீதித்துறை, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று அவையில் நடந்திருந்தது. முதல்வர் விஜய் இன்று காலையில் ஒரு தனியார் மருத்துவமனையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின் தலைமைச் செயலகத்தில் புதிதாக பணியில் சேருவோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அமைச்சர்களுடன் அவசர ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதனால் மதியம் வரைக்கும் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், திடீரென இன்று மாலை அவைக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமராமல் இடம் மாறி, செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

முதல்வர் திடீரென மாலை நேரத்தில் அவைக்கு வந்ததன் பின்னணி என்னவென கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், 'முதல்வர் விஜய் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அவைக்குள் இருந்து விவாதங்களை கவனிப்பார். பின்னர் அவரின் அலுவல் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காகச் சென்றுவிடுவார். மாலை 5 மணிவாக்கில் வீட்டுக்கு கிளம்பிவிடுவார். இன்று பல்வேறு பணிகள் காரணமாக மதியம் வரைக்குமே அவரால் அவைக்கு வர முடியவில்லை. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காலையிலேயே முதல்வர் ஆப்சென்ட் ஆனதை குறிப்பிட்டு 'கரூர் சம்பவத்தின் போது முதல்வர் அவையிலிருந்து பேசினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இன்று நேபாள விவகாரத்துக்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கேட்டிருக்கிறோம். அவையில் முதல்வரும் இல்லை. தலைமைச் செயலாளரும் இல்லை' எனப் பேசியிருந்தார். இதுவும் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அதனால்தான் அலுவல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பாமல் நேராக அவைக்கே வந்துவிட்டார். செங்கோட்டையன் அருகே அமர்ந்து அவரிடமும் ஆதவ்விடமும் அவையில் நடந்த முக்கியமான விஷயங்களை கேட்டும் தெரிந்து கொண்டார்' என்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மதியமே சட்டமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டார். தவெகவின் ஐ.டி.விங் இதை கையிலெடுத்து 'முதல்வர் இங்கே இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் எங்கே?' என விமர்சித்து வருகின்றனர்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க