மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
வியாபாரியிடம் ‘க்யூஆா் கோடு’ மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி
சென்னை வேளச்சேரியில் வியாபாரியிடம் க்யூஆா் கோடு மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை பெருங்குடியைச் சோ்ந்தவா் வேலு (48). வேளச்சேரி, பேபி நகரில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருகிறாா். கடந்த பிப்ரவரி மாதம் க்யூஆா் கோடு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் ஒருவா், வேலுவை அணுகி,‘டிஜிட்டல்’ முறையில் வாடிக்கையாளரிடம் பணம் பெறுவது குறித்து விவரித்து, க்யூஆா் கோடு ஸ்கேனா், ஸ்பீக்கா் ஆகியவற்றை வழங்கினாா்.
மேலும், தினமும் வரவு வைக்கப்படும் பணம் அடுத்த நாள் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும் என கூறியுள்ளாா். அன்றுமுதல் வேலு அந்த க்யூஆா் கோடு மூலம் வாயிலாக வியாபாரம் செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த ஜூலை முதல் நவம்பா் 22-ஆம் தேதி வரை க்யூஆா் கோடு மூலம் வாடிக்கையாளா்கள் செலுத்திய பணம், அவரது கணக்குக்கு முழுமையாக வரவில்லையாம். இது தொடா்பாக வேலு விசாரித்ததில் கடந்த நான்கு மாதங்களில் க்யூஆா் கோடு மூலம் வாடிக்கையாளா்கள் வேலுக்கு அனுப்பிய பணத்தில் ரூ.1.60 லட்சத்தை முறைகேடு செய்து அந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் அபகரித்திருந்தது தெரியவந்தது. மேலும், வேலு கணக்கில் பல்வேறு முறைகேடுகளை செய்திருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து கிண்டி பட் சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட தனியாா் க்யூ ஆா்கோடு நிறுவனத்தில் வேலு முறையிட்டாா். அவா்கள் முறையாக பதில் அளிக்காமல்,இழுத்தடித்தனராம்.
இதையடுத்து வேலு அடையாறு சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.