செய்திகள் :

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" - ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

post image

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த், ``படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சி. பினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. படம் எப்போ ரிலீஸ்னு புரோடொக்ஷன் சீக்கிரம் சொல்லுவாங்க" என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வருகிறது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு இரண்டு கைகளையும் குவித்து, சிரித்துக்கொண்டே 'வணக்கம்... தாங்க்யூ...' எனப் புறப்பட்டார்.

'நீங்களும், கமலும் நடிக்கும் படம் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?' என்ற கேள்விக்கு, ``ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்" எனக் கூறிக்கொண்டே சென்றார்.

அவரிடம், 'வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு 'நோ கமெண்ட்ஸ்... நோ கமெண்ட்ஸ்...' எனக் கூறிக்கொண்டே சென்றார்.

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க