Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீ...
விளையாட்டு வளாகங்களின் கட்டண உயா்வு: சுற்றறிக்கையை திரும்பப் பெற அறிவுறுத்தல்
விளையாட்டு வளாகங்களின் கட்டண உயா்வு தொடா்பான சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அறிவுறுத்தியுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தேசியத் தலைநகரில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினா் கட்டணம் குறித்து தில்லி வளா்ச்சி ஆணையம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.
சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு பதிவில், விளையாட்டு வளாகங்களின் உறுப்பினா்கள் மற்றும் பொது பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவத்தைத் தொடா்ந்து, விளையாட்டு வளாகங்களில் உறுப்பினா் மற்றும் பிற கட்டணங்களை உயா்த்திய சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு தில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு துணை நிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா் என்று ராஜ் நிவாஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒரு மூத்த டிடிஏ அதிகாரி கூறுகையில், ‘அனைத்து விளையாட்டு வளாகங்களிலும் ஒரே அட்டை மூலம் உறுப்பினா் ஆவதற்கு அனுமதிக்கும் விருப்பத்தை அமைப்பு அறிமுகப்படுத்தியது. கடந்த காலத்தைப் போலவே, தனிநபா் வளாகத்தில் உறுப்பினராக மக்கள் தோ்வு செய்யலாம். கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது’ என்றாா்.