செய்திகள் :

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம்

post image

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், "ஒரு பெண் தன் அன்றாட வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாகச் செல்லும் வீடியோ ஒன்று... இந்த அளவிற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது அதன் பின்னணியில் உள்ள பலவீனமான, பிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால் எனக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தெளிவுபடுத்துவதற்காகக் கூறுகிறேன், அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது?

ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

எங்களது கொள்கைகள், ஆட்சி முறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாதபோது, தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்துப் போலிக் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.

நேர்மறையாகப் பங்களிக்க எந்தவொரு விஷயமும் இல்லாதவர்கள் கையாளும் மிகப்பழமையான ஆயுதமே பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வுதான்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க