செய்திகள் :

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

post image

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீதிபதி லஞ்சம் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீதிபதி வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராஜீவ் கண்ணா கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். அதோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பணியில் இருந்தாலும் அவருக்கு எந்த வழக்கும் கொடுக்கப்படவில்லை.

ஆனால் தனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், தான் தவறு செய்யவில்லை என்று நீதிபதி வர்மா தெரிவித்தார். ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.

இதை எதிர்த்து நீதிபதி வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்த நீதிபதி ஷீல் நாகு, நீதிபதி ஜிஎஸ் சந்தவாலியா மற்றும் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய உள் விசாரணைக் குழு, நீதிபதி வர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்தது.

விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பாராளுமன்றத்திலும் நீதிபதியின் பதவியை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியை சபாநாயகர் பிர்லா மாற்றியமைத்தார். அக்கமிட்டி வெள்ளிக்கிழமை முதல் விசாரணையை தொடங்க இருந்தது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும்... மேலும் பார்க்க