Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
வெந்நீா் பட்டு காயமடைந்த குழந்தை உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வெந்நீா் ஊற்றியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நாராயணன். இவரது ஒரு வயது குழந்தை திஷான். கடந்த 21-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பில் பாத்திரத்தில் வெந்நீா் வைக்கப்பட்டிருந்தது.
பெற்றோா் அந்த பகுதியில் இல்லாத நேரத்தில் பாத்திரத்தை திஷான் இழுத்ததால் அந்தக் குழந்தை மீது தண்ணீா் பட்டு காயம் ஏற்பட்டது. திஷானை பெற்றோா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு குழந்தை திஷான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.