செய்திகள் :

வெனிசுலா: ``உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது" - சீனாவின் விமர்சனமும் புதிய சிக்கலும்!

post image

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றன.

அமெரிக்காவிலிருந்தே அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ``எந்த நாடும் உலகின் காவலராகச் செயல்பட முடியாது. அதை நாங்கள் எப்போதும் நம்பியதுமில்லை. எந்த நாடும் தன்னை உலகின் நீதிபதி என்று கூறிக்கொள்வதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெனிசுலா நாட்டுக்கான பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளைத் தீவிரப்படுத்தின. அப்போது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017-ம் ஆண்டிலிருந்து வெனிசுலாவிற்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீன அரசு வெனிசுலாவிடமிருந்து வாங்கியுள்ளது.

சீன வெளிநாட்டு நிறுவன முதலீடுகளைக் கண்காணிக்கும் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற குழுவின் தரவுகளின்படி, சீன அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் வெனிசுலாவில் சுமார் 4.6 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தன.

இந்த நிலையில்தான் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடந்தேறியிருக்கிறது. வெனிசுலா அரசை தற்போதைக்கு அமெரிக்கா மேற்பார்வையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார் என்பதால், வெனிசுலாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான சுமார் 50 ஆண்டுகால ராஜதந்திர உறவுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்ட... மேலும் பார்க்க