செய்திகள் :

"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து நடிகை கனிகா

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் 'வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்' என்று, தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தி நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கனிகா - விஜய்
கனிகா - விஜய்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து, நடிகை கனிகா வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், "அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், இன்று அவரை நேரில் பார்த்த அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது.

அவரது பாதுகாப்புப் படையினர் அவரை வேகமாக அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஒரு நிமிடம் நின்று, எங்களைக் கவனித்து, அன்பான சில வார்த்தைகளைப் பேசினார்.

வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்காக எப்போதும் துணை நிற்போம்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி

'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '29' திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவ... மேலும் பார்க்க

"அதை பார்த்ததும் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல்!" - 'கருப்பா கூட வா' பற்றி பா.விஜய்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத... மேலும் பார்க்க

29: 'இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!'- லோகேஷ் கனகராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் '... மேலும் பார்க்க

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" - பாடகி ஸ்வாகதா

பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது ரிஷிகேஷில் வசித்து வருகிறார். 'காற்றின் மொழி', 'பேச்சுலர்' உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் ஸ்வாகதா, தற்போது இசைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷ... மேலும் பார்க்க

'படையப்பா' ரீ-ரிலீஸ் வெற்றி: தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் 'படையப்பா'. ர... மேலும் பார்க்க

'தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா?' - வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை - தீர்வு என்ன?

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓ... மேலும் பார்க்க