செய்திகள் :

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

post image

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித்து வந்தார்.

ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீப காலமாக பிரேர்னா தனக்கு காதலன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நினைத்தார். அதோடு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று பிரேர்னா நினைத்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து பிரேர்னா கிரணைத் தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டிற்கு வந்த கிரணுடன் பிரேர்னா பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்த சேர் ஒன்றில் அமரும்படி பிரேர்னா தெரிவித்தார்.

உடனே கிரண் அந்தச் சேரில் அமர்ந்தார். இதையடுத்து கிரணை சேரோடு சேர்த்து பிரேர்னா கயிற்றால் கட்டினார். இதனைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். கயிற்றால் கட்டுவதற்கு கிரண் எதிர்ப்பு தெரிவித்தபோது, வெளிநாடுகளைப் போன்று வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லப்போவதாக பிரேர்னா தெரிவித்தார்.

அதனைக் கண்மூடித்தனமாக கிரண் நம்பினார். பிரேர்னா தன்னிடம் காதலைச் சொல்வார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த கிரணுக்கு பிரேர்னா செய்த காரியம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது.

பிரேர்னா வீட்டில் இருந்த ஏதோ ஒரு திரவ எரிபொருளை எடுத்து வந்து கிரண் மீது ஊற்றினார். அதனைத் தொடர்ந்து கிரணுக்குத் தீவைத்துவிட்டார். கயிற்றால் கட்டி இருந்ததால் கிரணால் தப்பிக்க முடியவில்லை. கிரண் உயிரிழப்பதை பிரேர்னா பார்த்துக்கொண்டிருந்ததோடு, அதனை வீடியோவும் எடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேர்னாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் இது குறித்து கூறுகையில், ''இருவரும் ஒரு ஆண்டாக நட்பில் இருந்துள்ளனர். பிரேர்னா தன்னை கிரண் புறக்கணிப்பதாக நினைத்தார். எனவேதான் அவரைத் தீவைத்து எரித்து கொன்றுள்ளார்'' என்று தெரிவித்தார்.

பிரேர்னாவிடம் விசாரித்தபோது, தீப்பிடித்தபோது தான் பாத்ரூம்பில் இருந்ததாக பிரேர்னா தெரிவித்தார். ஆனால் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க