"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், 134 இடங்களில் சென்னையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போதுவரை 8 பகுதிகளில் மட்டும் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 126 இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதைகளைப் பொருத்தவரை மணலியில் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, வில்லிவாக்கும் சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை என முக்கிய சுரங்கப்பாதைகள் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.