KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜின...
`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' - அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆகியார் பதில் அளித்து வந்தார்கள். ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்தது.

இந்நிலையில் சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலினை, ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பை அடுத்து ஓபிஎஸ் திமுகவில் இணைய இருக்கிறாரா? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகிய நிலையில் ஓரிரு நாட்களில் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.















