"100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா...
``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும்" - உ.பி கிராமங்களின் முடிவு!
ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்கள் தங்கள் தடை முடிவை திரும்பப் பெற்றன. மேலும் கிராமத் தலைவர்கள், "தங்களின் இந்த முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட 'சீரான சமூக ஒழுக்கத்தை' மையமாகக் கொண்டது" என விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்வத் மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளின் தலைவர்கள், சிறுவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கும், அரைக்கால் சட்டை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தொடர்பாக அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், "சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே மாதிரியான சமூக விதிகள் பொருந்த வேண்டும். சிறுவர்கள் வீட்டிலும் பொது இடங்களிலும் அரைக்கால் சட்டை அணிவதற்குப் பதிலாக, கால்சட்டை அல்லது பாரம்பரிய குர்தா-பைஜாமா போன்ற சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கால் சட்டை அணிவது உள்ளூர் மரபுகளுக்கு எதிரானது. மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படக் கூடாது.
பெரியவர்கள்கூட ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். கைபேசி சாதனங்களை தேவையற்ற முறையில் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒழுக்கத்தையும் சமூக சமநிலையையும் பராமரிக்க, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் சமமான கட்டுப்பாடுகளைக் குடும்பங்கள் உறுதி செய்ய வேண்டும்.
சமூகப் பிணைப்புகளைப் பாதுகாப்பதற்காகத் திருமண விழாக்கள் வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ நடத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எளிதில் முறிந்துவிடுகின்றன. பாரம்பரிய சமூகப் பிணைப்புகளையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்கள் செல்லுபடியாகும்.
இந்த முடிவுகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒரு பரந்த சமூகப் பிரசாரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். மற்ற பஞ்சாயத்துகளையும் இதில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



















