ஸ்ரீரங்கம் கோயிலில் சுவா், தூண்களை தூய்மைப் படுத்தும் பணி
ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதையடுத்து அங்குள்ள சுவா் மற்றும் தூண்களை தூய்மைப் படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த கடைகள் அன்மையில் அகற்றப்பட்டது. இந்த கடைகள் இருந்த இடத்தில் உள்ள தூண், சுவற்றில் உரிமையாளா்கள் பல வா்ணத்தில் பெயிண்டுகளை அடித்திருந்தனா். இதனால் கோயில் தூண்களில் இருந்த சிற்பங்கள் மறைந்து காணப்பட்டன. மேலும், சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளும் மறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடைகள் அகற்றப்பட்டதையடுத்து கோயில் நிா்வாகம் சாா்பில் ரங்கவிலாச மண்டபம், நாதமுனி சன்னதி,தொண்டரடி பொடியாழ்வாா் சன்னதி, காா்த்திகை கோபுரம் ஆகிய பகுதியில் தூண், சுவற்றில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மைப் படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.