செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: புதிய கற்கால வாழ்க்கை; 8000 ஆண்டுகள் பழமையான தேய்ப்புப் பள்ளங்கள் கண்டுபிடிப்பு

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும்போது உருவான தேய்ப்புப் பள்ளங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, நூர்சாகிபுரம் சு. சிவகுமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கருவி தேய்ப்புப் பள்ளங்கள்
கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

செண்பகத்தோப்பு வனத்துறைச் சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில், புதிய கற்காலக் கைக்கோடரிகளைத் தேய்த்து வழுவழுப்பாக்கும்போது உருவான 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இதில் 3 பள்ளங்கள் நேராகவும், ஒன்று அதன் மேற்பகுதியில் குறுக்காகவும் அமைந்துள்ளது.

நேராக உள்ள பள்ளங்கள் கற்கருவிகளை வழுவழுப்பாகத் தேய்க்கப் பயன்பட்டிருக்கலாம். குறுக்காக உள்ள சிறிய பள்ளம் அக்கருவிகளை கூர்மையாக்கப் பயன்பட்டிருக்கலாம்.

இந்தப் பள்ளங்கள் ஆயிரக்கணக்கான முறை கற்கருவிகளைத் தேய்த்ததனால் பாறையில் ஆழமாக பள்ளங்கள் உருவாகியிருக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு தென் தமிழ்நாட்டு தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்காத நிலையில், தற்போது கண்டறியப்பட்ட இந்தத் தேய்ப்புப் பள்ளங்கள், இப்பகுதியில் புதிய கற்கால நாகரிகம் இருந்ததற்கான வலுவான சான்றாக உள்ளன.

கருவி தேய்ப்புப் பள்ளங்கள்
கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

புதிய கற்காலம் (நியோலித்திக் காலம்) என்பது சுமார் கி.மு. 6000 முதல் கி.மு. 2000 வரையிலான காலகட்டமாகும். இக்காலத்தில் மனிதர்கள் வேட்டையாடும் வாழ்க்கை முறையிலிருந்து விவசாய வாழ்க்கைக்கு மாறினர். கற்கருவிகளை மேம்படுத்தி, வழுவழுப்பாகவும் கூர்மையாகவும் செய்யத் தொடங்கினர். மட்பாண்டங்களைச் செய்யவும், நிரந்தரக் குடியிருப்புகளை அமைக்கவும் தொடங்கிய காலம் இது.

வடதமிழ்நாட்டில் சேலம், திருவண்ணாமலை, திருச்சி போன்ற மாவட்டங்களில் புதிய கற்கால தேய்ப்புப் பள்ளங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ஏராளமான புதிய கற்கால தளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், தென் தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற தடயங்கள் கிடைக்காத நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு முதல்முறையாகும்.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறுகையில், "இந்தக் கண்டுபிடிப்பு தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால மானுட வாழ்வு இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு நடத்தினால், குடியிருப்புகள், மட்பாண்டங்கள் போன்ற மேலும் பல தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. செண்பகத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

செண்பகத்தோப்பு பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் நீர் ஆதாரங்கள் ஏராளமாக இருப்பதால், புதிய கற்கால மக்கள் இங்கு குடியேறியிருக்கக்கூடும். பாறைகள் ஏராளமாக இருப்பதால், கற்கருவிகள் தயாரிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்கும்” என்றார்.

இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை இப்பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த இடத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள் சங்கமம்: மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்திய கலை விழா

குழந்தைகள் மத்தியில் கலை, இலக்கிய வடிவங்களைக் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலொன்றுதான் 'குழந்தைகள் சங்கமம்' நிகழ்ச்சி. பள்ளிக்கல்வித்துறை அரசு மாதிரிப் ... மேலும் பார்க்க

நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதின விழா | Photo Album

வேடமிட்டு நடனமாடிய கூத்து கலைஞர்கள்வேடமிட்டு நடனமாடிய கூத்து கலைஞர்கள்வேடமிட்டு நடனமாடிய கூத்து கலைஞர்கள்வேடமிட்டு நடனமாடிய கூத்து கலைஞர்கள்வேடமிட்டு நடனமாடிய கூத்து கலைஞர்கள்வேடமிட்டு நடனமாடிய கூத்து... மேலும் பார்க்க