செய்திகள் :

'ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்' - உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப்

post image

எப்போது ஈரான் போர் தொடங்கியதோ, அப்போதிருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது.

இதனால், எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று ஈரானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ பயமுறுத்திப் பார்த்தார். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

அதனால், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார்.

"ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், இங்கிலாந்து போன்று ஜெட் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும்... ஈரானுக்கு எதிரான போரில் இணையாமல் இருக்கும் இந்த நாடுகளுக்கும் என்னுடைய பரிந்துரைகள்:

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

நம்பர் 1: எங்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அதனால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள்.

நம்பர் 2: கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி, ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று, எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்காக நீங்கள் எப்படி சண்டைப் போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.

எப்படி நீங்கள் எங்களுக்கு உதவவில்லையோ, அதே மாதிரி, இனி அமெரிக்காவும் உங்களுக்கு உதவாது.

ஈரானை நாங்கள் அடியோடு அழித்துவிட்டோம். கடினமான கட்டம் முடிந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான எண்ணெயை நீங்களே சென்று பெறுங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க