செய்திகள் :

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

post image

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி.

ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்.

தாக்குதல்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஹார்முஸ் நீர்சந்தியில் பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து சுங்க வரி வசூலித்துக் கொள்கிறோம் என்று ஈரான் சொன்னது.

அந்தச் சுங்க வரியை ஓமானுடனும் பங்கிட்டுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது ஈரான்.

ஹார்முஸ் நீர்சந்தி
ஹார்முஸ் நீர்சந்தி
ஒருவேளை, போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரானுடன் ஓமனும் குறுகிய காலத்திற்கு ஹார்முஸ் நீர்சந்தியைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் போட்டால், அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அவர்கள் உடனே ஹார்முஸ் நீர்சந்தியைத் திறக்க வேண்டுமா அல்லது சிறிது காலம் அவர்களுக்குக் கொடுக்கப்படுமா? என்கிற கேள்விகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நேற்று வெள்ளை மாளிகையில் கேட்கப்பட்டன.

"அந்த நீர்ச்சந்தி எல்லாருக்குமே திறந்துதான் இருக்கப் போகிறது. அதை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று கேட்கிறீர்களா? அது சர்வதேசக் கடல் பகுதி. அதை யாரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.

நாங்கள் அதை மேலிருந்து கண்காணிப்போம். அவ்வளவுதான். ஆனால் யாரும் அதை ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்த முடியாது. அதுதான் நம்முடைய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியே. அவர்களுக்கு அதைக் கட்டுப்பாட்டில் எடுக்க ஆசைதான். ஆனால் யாரும் அதைச் செய்ய முடியாது. அது பொதுவான சர்வதேசக் கடல் பகுதி.

அதேபோல ஓமனும் மற்ற எல்லாரையும் போல ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் அவர்களைத் துவம்சம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள்". என பதில் அளித்திருக்கிறார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க