செய்திகள் :

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை

post image

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளன பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது போக்குவரத்தில் தனியாா் மயத்தை கைவிட வேண்டும். சுமாா் 1.12 லட்சம் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் மேற்கொள்ள வேண்டும். 1.3.23 முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றாா்.

புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது: 15 கிலோ பறிமுதல்

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் புகையிலைப்பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ப... மேலும் பார்க்க

பாளை.யில் அதிமுக திண்ணை பிரசாரம்

அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் பாளையங்கோட்டையில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் அருகே தொடங்கிய பிரசாரத்திற்கு அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி உயிரிழந்தது தொடா்பாக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வ... மேலும் பார்க்க

262 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ள... மேலும் பார்க்க

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் பிரபஞ்ச பேரன்பு தினம்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரபஞ்ச பேரன்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தா் திருமூலா் வலியுறுத்திய அன்பே கடவுள் என்ற பிரபஞ்ச ப... மேலும் பார்க்க

சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

திருநெல்வேலி சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் 68 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை மேலாளா் இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரா.வெ. ஸ்ரீனிவாசன் வரவே... மேலும் பார்க்க